தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கறுப்பர் கூட்டத்திற்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம் -பாஜக முருகன் கேள்வி! - TN BJP Leader Murugan

சென்னை: கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாகப் பேசிய கறுப்பர் கூட்டத்திற்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு என்ன சம்பந்தம்? என பாஜக மாநில தலைவர் முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருப்பர் கூட்டத்திற்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம் -பாஜக முருகன் கேள்வி!
கருப்பர் கூட்டத்திற்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம் -பாஜக முருகன் கேள்வி!

By

Published : Jul 23, 2020, 3:58 PM IST

சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் முருகன் தலைமையில் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான பிரமிட் நடராஜன் உள்ளிட்ட பல திரைப்படத் துறையினர் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். அப்போது கந்த சஷ்டி கவசத்தின் பெருமைகளை உணர்த்தும் வகையில் பாடல் ஒன்றை பாஜக தலைவர் முருகன் வெளியிட்டார். இதில் மாநில துணை தலைவர் வி.பி. சாமி, பாஜக மூத்த நிர்வாகி இல. கணேசன், பாஜக நிர்வாகிகள் நடிகை நமீதா, காயத்ரி பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முருகன் “மாநில வாரியாக இட ஒதுக்கீடு முறை மாறும். சமூக நீதி பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு எந்த அருகதையும் கிடையாது. தானாகவே முயற்சி எடுத்து நீதிபதிகளாக உயர்ந்து பதவி வகித்து வருபவர்களை கொச்சைப்படுத்தி பேசிய ஆர்.எஸ். பாரதியை இதுவரை திமுக தலைவர் கண்டிக்கவில்லை. பட்டியலின மக்கள் மீது அதிக பாஜக அக்கறை கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் பாஜகவின் பட்டியலினத்தவர்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதைப்பற்றி திமுகவினர் பேசக்கூடாது” என்றார்.

பாஜக முருகன் செய்தியாளர்ச் சந்திப்பு

மேலும், கந்த சஷ்டி கவச பாடலை அவதூறு பரப்பிய கறுப்பர் கூட்டத்திற்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் என்ன சம்பந்தம்? என்றும் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாகப் பேசியது குறித்து இதுவரை திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டன அறிக்கையை இதுவரை வெளியிடாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க...மக்களின் மரணத்தை மறைத்த முதலமைச்சர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details