ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "கரோனா தொற்று தீவிரமாக இருந்தபோது ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்திருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது .
2 ஆம் அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை
நேற்று முன் தினம் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ஒன்றிய சுகாதாரத் துறை இணை அமைச்சர் , " கரோனா வைரஸ் இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பு ஏற்பட்டதாக எந்த மாநில , யூனியன் பிரதேச அரசுகளும் தெரிவிக்கவில்லை " என தெரிவித்து இருக்கிறார் . இந்தச் செய்தி அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது .
ஆக்சிஜன் பற்றாக்குறையால் தமிழ்நாட்டில் உயிரிழப்பு இல்லை
மாநிலங்கள் அளிக்கும் புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே மத்திய அரசு மேற்படி பதிலை மாநிலங்களவையில் தெரிவித்து இருக்கிறது. இதில் குறை காண்பதற்கு ஒன்றுமில்லை .
இருப்பினும் , மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் , ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன் வைத்துள்ளன . ஆனால் , தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற தி.மு.க. அரசோ , " ஆக்சிஜன் பற்றாக்குறையால் தமிழ்நாட்டில் உயிரிழப்பு இல்லை " என்று தெரிவித்து இருக்கிறது .
இதனை , தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார். ஒரு செய்தியை பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கின்ற உரிமை அமைச்சருக்கு உண்டு . அதை நான் மறுக்கவில்லை . ஆனால் , அந்தச் செய்தியில் உண்மை இருக்கிறதா என்பதை ஆராய வேண்டிய கடமை எதிர்க்கட்சிக்கு உண்டு .
சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து , 7-5-2021 அன்று மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற அன்றைய தினமே இந்தியப்பிரதமருக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து ஒரு கடிதத்தை எழுதினார் .
பிரதமருக்கு கடிதம்
அந்தக் கடிதத்தில் , தமிழ்நாட்டின் தினசரி ஆக்சிஜன் தேவை 440 MT என்றும் , அடுத்த இரண்டு வாரங்களில் தமிழ்நாட்டின் தேவை 840 MT ஆக அதிகரிக்கும். துரதிர்ஷ்டவசமாக , தேசிய ஆக்சிஜன் திட்டத்தில் , தமிழ்நாட்டிற்கு 220 MT ஆக்சிஜன் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அலுவலர்கள் மட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் குறைந்தபட்சம் 476 MT ஆக்சிஜனை தர ஒத்துக்கொள்ளப்பட்டதுஆனால் அதற்கான ஆணை வெளியிடப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது .
செங்கல்பட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு
மேலும் , "The availability of oxygen in Tamil Nadu is very very critical and there was an unfortunate incident of 13 deaths at Chengalpattu 2 days ago" என்று தமிழ்நாடு முதலமைச்சர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் .
அதாவது , தமிழ்நாடு ஆக்சிஜன் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும் , ஆக்சிஜன் பற்றாக்குறையால் இரண்டு நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டில் 13 பேர் எதிர்பாரதவிதமாக இறந்து இருக்கிறார்கள். தமிழ் நாளிதழிலும் , " தமிழகத்தில் செங்கல்பட்டில் ' இரண்டு நாட்களுக்கு முன் , ஆக்சிஜன் பற்றாக்குறையால் 13 பேர் இறந்ததுள்ளது துரதிர்ஷ்டவசமானது " என முதலமைச்சர் குறிப்பிட்டிருப்பதாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது .
அமைச்சரின் பேட்டியால் குழப்பம்
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சரின் பேட்டியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் முரண்பாடு தெள்ளத் தெளிவாகிறது . ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப , தமிழ்நாடு அரசால் தெரிவிக்கப்படும். அனைத்து புள்ளி விவரங்களுமே இதுபோன்றுதான் இருக்குமோ என்ற சந்தேகம் அனைவரின் மனங்களிலும் எழுந்துள்ளது .
தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்த கருத்து உண்மையா அல்லது மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் பேட்டி மூலம் தெரிவித்த தகவல் உண்மையா என்பதை விளக்க வேண்டிய கடமை தமிழ்நாடு அரசிற்கு உண்டு .
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இது குறித்து உடனடியாக ஆராய்ந்து , உண்மை நிலையை தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க:கட்சி பின்னே நிற்கும் - விஜயபாஸ்கர் விவகாரத்தில் அதிமுக அறிக்கை