சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (B.Ed) முதலாம் ஆண்டில் சேர்வதற்கு https://www.tngasa.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டன. அதன் மேலும் மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தேர்வுச் செய்து அளித்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரியில் 900 இடங்களும், அரசு உதவிப்பெறும் 14 கல்லூரிகளில் 1140 இடங்களும் என 2040 இடங்களில் பி.எட் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், பி.எட் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று (செப்.19) துவங்கி 25ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
சென்னை லேடி வில்லிங்டன் கல்லூரியில் நடைபெற்ற கலந்தாய்வினை கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் தீபா பார்வையிட்டு, இடங்களை தேர்வு செய்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு உத்தரவுகளை வழங்கி, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.