குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்று இந்த விவகாரத்தில் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்நிலையில், எம்எல்ஏ அபூபக்கர் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து சிறுபான்மையின தலைவர்களிடம் முதலமைச்சர் கருத்து கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரை இன்று நேரில் சந்திக்கவிருக்கும் நிலையில் நேற்று சிறுபான்மையின சமுதாயத்தை சேர்ந்த எம்பி எம்எல்ஏக்கள் துணை முதலமைச்சரை சந்தித்து சட்டத்தை ரத்து செய்வதற்கான கோரிக்கை மனுவினை வழங்கினர். இந்த சந்திப்பின் போது அமைச்சர் நிலோபர் கபில், அதிமுக ராஜ்யசபா எம்பி முஹம்மது ஜான், எம்எல்ஏ அபூபக்கர், முன்னாள் எம்பி அன்வர்ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.