தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நீட் தேர்வை ரத்து செய்' வாசங்கள் அடங்கிய முகக்கவசத்துடன் சட்டப்பேரவைக்கு வந்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்! - undefined

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/14-September-2020/8792393_801_8792393_1600056640232.png
http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/14-September-2020/8792393_801_8792393_1600056640232.png

By

Published : Sep 14, 2020, 9:45 AM IST

Updated : Sep 14, 2020, 10:19 AM IST

10:18 September 14

இதையடுத்து சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக, பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார்.

10:17 September 14

பேரவையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்களுக்கு இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

10:13 September 14

பேரவையில் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஹெச். வசந்தகுமார் மறைவுக்கு இரங்கல்.

10:10 September 14

மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து, ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.

10:04 September 14

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது.

09:45 September 14

கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் இன்னும் சிறிது நேரத்தில் கூடுகிறது. காலை 10 மணிக்கு கூடும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். அதைத்தொடர்ந்து முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.யான ஹெச்.வசந்தகுமார் ஆகியோரின் மறைவு மற்றும் கரோனாவால் உயிரிழந்தவர்கள் மறைவு குறித்த இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

அதைத்தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் நிறைவு பெறுகிறது. கூட்டத்தொடர் நடைபெறுவதை முன்னிட்டு, பாதுகாப்பு பணியில் சுமார் 1,500 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கூட்டத்தொடரில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.

09:36 September 14

வாசகங்கள் இடம்பெற்ற முகக்கவசம் அணிந்து வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் 'நீட் தேர்வை ரத்து செய்' என்ற வாசகம் இடம்பெற்ற முகக்கவசங்களை அணிந்து வருகை தந்துள்ளனர்.

Last Updated : Sep 14, 2020, 10:19 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details