சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது செய்யூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி. அரசு, செய்யூர், சித்தாமூர் ஒன்றியம், சித்தர்காடு ஆகிய கிராமங்களுக்குப் புதிய மின்மாற்றி அமைக்க அரசு முன்வருமா என்று கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, ”ஏற்கனவே இருக்கின்ற மின்மாற்றி போதுமான அளவிற்கு இருக்கிறது.
50 விழுக்காடு மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுவருகிறது. எனவே, புதிதாக மின்மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. சட்டப்பேரவை உறுப்பினர் மின் அழுத்தம் இருக்கிறது என கூறியுள்ளதால், அது குறித்து ஆய்வு செய்யப்படும்.