சென்னை: 1969ஆம் ஆண்டு தொடங்கி ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இவரது உருவப்படத்தை சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை திறக்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவையொட்டி, கருணாநிதியின் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கவுள்ளார். இதற்காக சில நாள்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்று, குடியரசுத் தலைவருக்கு அழைப்பு கொடுத்திருந்தார்.