தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TN Assembly Session: ஆளுநர் உரையுடன் நாளை கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை - தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை ஆளுநர் உரையுடன் கூடுகிறது

TN Assembly Session: தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை ஆளுநர் உரையுடன் கூடுகிறது. ஆளுநர் உரையை அதிமுக புறக்கணிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை
தமிழ்நாடு சட்டப்பேரவை

By

Published : Jan 4, 2022, 4:29 PM IST

TN Assembly Session: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டமானது கலைவாணர் அரங்கத்தில் உள்ள மூன்றாவது தளத்தில் நாளை (ஜனவரி 5) காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் தொடங்குகிறது.

ஆளுநர் உரையில் பல்வேறு நலத்திட்டங்கள், சலுகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 505 திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் 200 வாக்குறுதிகளைச் செய்துவிட்டதாகச் சொல்லி வரும் நிலையில், ஆளுநர் உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிட வாய்ப்புள்ளது.

அதிமுக புறக்கணிக்க வாய்ப்பா?

கடந்த அதிமுக ஆட்சியின்போது நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆளுநர் உரையின்போது திமுகவினர் ஆளுநரைப் பேசவிடாமல் தடுத்து நிறுத்தி, பின்னர் ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளியே வந்தனர்.

இந்நிலையில் நாளை நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரையின் போது, நீட் தேர்விலிருந்து விலக்கு, அம்மா கிளினிக் மூடப்படுவது உள்ளிட்டவை குறித்து கேட்டு அதிமுகவினர் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சமீபத்தில் ஆளுநரைச் சந்தித்து அதிமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நாளைய ஆளுநர் உரையின்போது பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காகிதமில்லா சட்டப்பேரவை

100 விழுக்காடு தொடுதிரை உதவியுடன் கணினி மூலம் காகிதம் இல்லாமல் சட்டப்பேரவை நடைபெறுகிறது. சட்டப்பேரவையை எத்தனை நாள் நடத்துவது குறித்து நாளை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

கரோனா பரிசோதனை கட்டாயம்

சட்டப்பேரவை நாளை கூட உள்ளதால் அதில் பங்கேற்கும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்கள் உள்பட அனைவருக்கும் கரோனா பரிசோதனை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு முறை தடுப்பூசிகள் போடப்பட்டு இருப்பினும் பரிசோதனை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றம்

கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக சபாநாயகர் அப்பாவு வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் கரோனா தொடர்ந்து குறைந்துவரும் சூழ்நிலையில் சட்டப்பேரவை வருகின்ற ஜனவரி ஐந்தாம் தேதி சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை வளாகத்தில் நடைபெறும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகமாக உள்ளதால் கலைவாணர் அரங்கில் மூன்றாவது தளத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று கடந்த சில நாள்களுக்கு முன்பு பேரவைச் செயலாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நாளை காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் சமூக இடைவெளியோடு சட்டப்பேரவை கூட உள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

சட்டப்பேரவையில் நாளைமுதல் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுவதால் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் இரவு பகலாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:2000 அம்மா மினி கிளினிக் மூடல்- எடப்பாடி, டிடிவி கடும் கண்டனம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details