தமிழ்நாடு சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடரின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் 6ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 9ஆம் தேதி வரையில் கூட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதம் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. சட்டப்பேரவையில் ஒரே நாளில் 27 துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.