சென்னைதலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையில், இன்று (ஏப்.18) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுவதற்கான சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்குத் தொடங்கியது.
அப்போது பேரவை தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு, நேற்று (ஏப். 17) நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உயிரிழந்ததற்குச் சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசித்தார்.
இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு மணித்துளி எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் செய்தியில், "நம்பிக்கைக்குரிய இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனின் அகால மரணம் பற்றி கேள்விப்பட்டு வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சி அடைந்தேன்.
டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் மேலும், அவர் ஒரு லெஜண்ட், அவர் மிக விரைவில் நம்மை விட்டு பிரிந்தது எனக்கு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
மேகாலய மாநிலத்தில் 83ஆவது சீனியர் தேசிய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்வதற்காக தனது நண்பர்களுடன் விஸ்வா தீனதயாளன் டாக்சியில் ஷில்லாங் நோக்கி சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதையும் படிங்க: சட்டப்பேரவை - வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்