தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேரவையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளியிட்ட அறிவிப்புகள்!

சென்னை: 701 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் தானியங்கி பால் பரிசோதனை உபகரணங்கள் வாங்க ரூ.8.76 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளியிட்டார்.

பேரவை

By

Published : Jul 5, 2019, 9:40 PM IST

பேரவையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளியிட்ட அறிவிப்புகள்:

  • 701 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் தானியங்கி பால் பரிசோதனை உபகரணங்கள் வாங்க ரூ.8.76 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
  • 8 மாவட்ட ஒன்றியங்களில் 5,000 லிட்டர் கொள்ளளவில் 34 மொத்த பால் குளிர்விப்பான்கள் ரூ.4.76 கோடி செலவில் அமைக்கப்படும்.
  • 350 மொத்த பால் குறிப்பு மையங்களில் கிளவுட் சார்ந்த கண்காணிப்பு ரூ.1.75 கோடி செலவில் நிறுவப்படும்.
  • 103 பால் குளிரூட்டும் நிலையங்களுக்கு பால் கலப்படம் கண்டறியும் கருவிகள் ரூ.2.96 கோடி செலவில் வழங்கப்படும்.
  • ஈரோட்டில் இயங்கும் கால்நடை தீவன தொழிற்சாலையின் தினசரி உற்பத்தி திறனை 150 மெட்ரிக் டன்னில் இருந்து 300 மெட்ரிக் டன் ஆக உயர்த்த ரூ.3.4 கோடி மதிப்பீட்டில் திறன் மேம்படுத்தப்படும்.
  • விழுப்புரம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெண்ணெய் நெய் தயிர் தயாரிப்பிற்கான வசதிகளை மேம்படுத்த ரூ.6.45 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • திருநெல்வேலி மாவட்டம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் வசதி மற்றும் தினசரி 1.5 லட்சம் லிட்டர் பால் கையாளுவதற்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கப்படும்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details