தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்எல்ஏக்களும் குற்றப் பின்னணியும் - கடந்த தேர்தல் ஒரு அலசல்! - 2021 assembly election

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2021வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலுக்கு முன்பு வேட்பாளர்கள் தங்கள் குற்றப் பின்னணி குறித்து தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் குற்றப் பின்னணி...

MLA CRIME
MLA CRIME

By

Published : Mar 3, 2021, 6:47 PM IST

Updated : Mar 3, 2021, 7:22 PM IST

தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், கடந்த 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களில் 223 நபர்களின் பிரமாண பத்திரத்தை ஆய்வு செய்தது. அதில் எம்எல்ஏக்களின் குற்றப் பின்னணி குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

குற்ற வழக்குடைய எம்எல்ஏக்கள்:

பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் 75 எம்எல்ஏக்கள் தங்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் குற்ற வழக்குகள் இருந்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 70 ( மொத்தம் - 234 ) ஆகும்.

தீவிரமான குற்ற வழக்குடைய எம்எல்ஏக்கள்:

2016ஆம் ஆண்டு 42 எம்எல்ஏக்கள் மீது தீவிரமான குற்ற வழக்குகள் இருந்தன. கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் இதில் அடங்கும். 2011ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 37ஆக இருந்தது.

கொலை மற்றும் கொலை முயற்சியில் தொடர்புடைய எம்எல்ஏக்கள்:

கொலை மற்றும் கொலை முயற்சியில் தொடர்புடைய எம்எல்ஏக்கள்

திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் தொகுதியைச் சேர்ந்த திமுக எம்எல்ஏ கே.பி.பி. சாமி மீது மட்டும் கொலை வழக்கு இருந்தது. 9 எம்எல்ஏக்கள் மீது கொலை முயற்சி வழக்குகள் இருந்தன. 5 திமுக எம்எல்ஏக்கள், 2 அதிமுக மற்றும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ மீது கொலை தொடர்பான வழக்குகள் இருந்தன.

பெண்களுக்கு எதிரான வன்முறையில் தொடர்புடைய எம்எல்ஏக்கள்:

சென்னை, துறைமுகம் தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ பி.கே. சேகர் பாபு மீது பெண் ஒருவரைத் தாக்கியது தொடர்பான வழக்கு ஒன்று இருந்தது.

பெண்களுக்கு எதிரான வன்முறையில் தொடர்புடைய எம்எல்ஏக்கள்

கட்சி வாரியாக எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகள்:

குற்ற வழக்குடைய எம்எல்ஏக்கள்

அதிமுக - 127இல் 28 எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள்

திமுக - 88இல் 42 எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள்

காங்கிரஸ் - 7இல் 5 எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள்

கட்சி வாரியாக தீவிரமான குற்ற வழக்குடைய எம்எல்ஏக்கள்:

தீவிரமான குற்ற வழக்குடைய எம்எல்ஏக்கள்

திமுக - 88இல் 23 எம்எல்ஏக்கள் மீது மோசமான குற்ற வழக்குகள், அதிமுக - 127இல் 16, காங்கிரஸ் - 7இல் 3 என மோசமான குற்ற வழக்குகள் பதிவாகியிருந்தன.

இவை அனைத்தும் 2016ஆம் ஆண்டு ஆய்வு செய்யப்பட்ட பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் ஆகும்.

இதையும் படிங்க:2016 சட்டப்பேரவைத் தேர்தல்: வெற்றிகளும், தோல்விகளும்

Last Updated : Mar 3, 2021, 7:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details