தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 7, 2020, 10:09 PM IST

ETV Bharat / state

' 110 விதியின் கீழ் ஏராளம் திட்டம் தொடங்கியாச்சு ' - முதலமைச்சர் விளக்கம்

சென்னை: 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பெரும்பாலும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

cm palanisamy
cm palanisamy

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன், 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் நிலை என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர்:

"2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் ஆயிரத்து 55 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு அனைத்து அறிவிப்புக்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் 822 அறிவிப்புக்கான திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 230 திட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளது. 2 அறிவிப்புகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஒரு அறிவிப்புக்காக, மத்திய அரசின் அனுமதிவேண்டி காத்திருக்கிறோம்.

அதே போல் 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான மூன்று ஆண்டுகளில் 110 விதியின் கீழ் 453 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு அதில் 417 அறிவிப்புக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் 114 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 303 திட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளன.

இதில், 26 திட்டங்கள் ஆயத்த நிலையில் உள்ளதாகவும், 9 திட்டங்கள் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும், 1 திட்டம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது" எனவும் தெரிவித்தார்.

மேலும், அதிமுக ஆட்சிக்கு வந்து இதுநாள் வரை 34 ஆயிரத்து 853 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பில் 47 ஆயிரத்து 828 பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என புள்ளி விவரத்துடன் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details