சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள் மதியம் இரண்டு மணியுடன் நிறைவு பெற்றது. நாளை காலை 10 மணிக்கு அவை மீண்டும் தொடங்கும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிகழ்வுகள் - 18/2/2020 - Senthil Balaji MLA Arrived at Assembly
15:01 February 18
பேரவையின் இன்றைய நிகழ்வுகள் நிறைவு
14:53 February 18
இயற்கைப் பேரிடரின்போது பாதிப்புகளைத் தவிர்க்க சவுக்கு மரக்காடுகள்?
இயற்கைப் பேரிடரின்போது ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க சவுக்கு மரக்காடுகள் வளர்க்க அரசு பரிசீலிக்கும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: இயற்கைப் பேரிடரின்போது பாதிப்புகளைத் தவிர்க்க சவுக்கு மரக்காடுகள்? - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
13:59 February 18
‘பவானிசாகர் வன பகுதிகளில் புதிய மின் பாதை’
பவானிசாகர் வன பகுதிகளில் நீதிமன்ற அனுமதி பெற்று புதிய மின் பாதை அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தகவல் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: பவானிசாகர் வன பகுதிகளில் புதிய மின் பாதை: அமைச்சர் தங்கமணி தகவல்
13:39 February 18
‘சபாநாயகர் மகா உத்தமர்’ - வெளிநடப்புக்கு பின் துரைமுருகன் பேட்டி
தங்கம் தென்னரசு எழுப்பிய உரிமை மீரல் பிரச்னையை பேரவைத் தலைவர் தனபால் ஏற்க மறுத்ததையடுத்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிங்க: ‘சபாநாயகர் மகா உத்தமர்’ - துரைமுருகன் நையாண்டி
12:21 February 18
சிஏஏவால் சிறுபான்மையினருக்கு பாதிப்பு இல்லை
குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் தமிழ்நாட்டில் உள்ள எந்த சிறுபான்மையினருக்கும் பாதிப்பு இல்லை. அமைதியாக உள்ள தமிழ்நாட்டில், எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கை கெடுக்கப் பார்க்கின்றன - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
12:09 February 18
திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் - இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது என்று தெரிந்தும் தவறான தகவலை அமைச்சர் பாண்டியராஜன் பேரவையில் பதிவு செய்துள்ளார். நாங்கள் உரிமை மீறல் தீர்ப்பினை ஏற்க முடியாது என்று கூறி வெளிநடப்பு.
இதையும் படிங்க:ஓபிஎஸ் என்ன மாடு பிடி வீரரா? - துரைமுருகனால் அவையில் கல கல
12:02 February 18
சபாநாயகர் தனபால் மறுப்பு
திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு எழுப்பிய உரிமை மீறலில், சம்பந்தப்பட்ட உறுப்பினர் விளக்கம் அளித்ததால் அதில் எவ்வித உரிமை மீறலும் இல்லை.
12:02 February 18
‘அவையில் தவறான தகவல்’ - அமைச்சர் க. பாண்டியராஜன் மீது உரிமைப் பிரச்னை
திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு - ஜனவரி 8ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தின்போது இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று கேட்டபோது தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன், இலங்கை தமிழர்களுக்கு நிச்சயம் இரட்டை குடியுரிமை அளிக்கப்படும் என்று கூறினார்.
ஆனால் அதற்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே இரட்டை குடியுரிமை வழங்க முடியாது என்று தெரிந்தும், அவையை தவறாக வழிநடத்தியதற்கும், தவறான தகவல்களை அளித்ததற்கும் அவை விதி எண் 219இன் படி உரிமை மீறல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அமைச்சர் க. பாண்டியராஜன் - ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் நாடற்றவர்களாக இருந்தனர். அதில் ஆறு லட்சம் பேரை இந்தியா அரவணைத்துக்கொள்ளும், மீதமுள்ள மூன்று லட்சம் பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்படும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சரை சந்தித்து முதலமைச்சரை வலியுறுத்தி உள்ளார். இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.
11:47 February 18
பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் கடும் அமளி
தங்கம் தென்னரசு உரிமை மீறல் பிரச்னையை எழுப்பிய நிலையில், திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து துரைமுருகன் தலைமையிலான திமுக எம்எல்ஏக்கள், பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
11:42 February 18
கந்தர்வக்கோட்டையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்?
பா. ஆறுமுகம் எம்எல்ஏ - கந்தர்வக்கோட்டை தொகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்க வேண்டும்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் - கந்தர்வக்கோட்டையில் ஆய்வு செய்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கந்தவர்கோட்டை பகுதியில் வாகனங்கள் அதிகமாக இருக்குமாயின் நிச்சயம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படும்.
11:29 February 18
அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்
எம்எல்ஏ சம்பத்து - காவேரிப்பாக்கம் பகுதியில் ஆரம்ப சுகதார நிலையத்தில் 20 படுக்கைகள் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சோழிங்கர் பகுதியில் விபத்து அதிகம் ஏற்படுவதால் அதனைத் தடுக்கவும், உரிய மருத்துவ வசதி அமைத்து தரவும் கோரிக்கை
அமைச்சர் விஜய பாஸ்கர்: காவேரிபாக்கம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகதார நிலையத்தை தரம் உயர்த்த, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துகளைத் தடுக்கவும், விபத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு உடனடி சிசிச்சை அளிக்கும் படி வசதி செய்து தரப்படும்.
11:07 February 18
‘ஜல்லிக்கட்டு நாயகன்’
ஜல்லிக்கட்டுக்காக நாடே போராடிக்கொண்டு இருந்தபோது துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்று தந்தார். அதனால் அவரை ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என அழைக்கிறோம்.
விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் போது எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பார்வையாளராகவோ, மாடுபிடி வீரராகவோ வரலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் பேரவையில் பதில்.
10:36 February 18
கோரிக்கை
எம்எல்ஏ ஈஸ்வரன் - பவானிசாகர் பகுதி, நந்தி பகுதியில் மின்சார வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
ரகுபதி எம்எல்ஏ - திருமயம் அடுத்த ஆத்தூர் பகுதியில் மின் துணை நிலையம் அமைக்க வேண்டும், மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
10:27 February 18
‘உண்மையான விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் சிக்கல் இல்லை’
கூட்டுறவு வங்கிகள் மூலமாக விவசாயிகளுக்கு தாராளமாகக் கடன் வழங்கப்படும். அதே நேரத்தில் தவறான தகவல்களைக் கொடுத்து விவசாயக் கடன் பெற முயல்வோருக்கு கடன் வழங்கக் கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் தகவல்களுக்கு: உண்மையான விவசாயிகளுக்கு கடன் தாராளமாகக் கிடைக்கும்: அமைச்சர் செல்லூர் ராஜூ
10:14 February 18
‘யுத்த நிலை; புத்த நிலை’ - செல்லூர் ராஜூ பாராட்டு
வெற்றி பெறும் வரை யுத்த நிலையிலும், வெற்றி பெற்ற பின் புத்த நிலையிலும் இருக்கும் எங்கள் முதலமைச்சர் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டு!
சென்ற 2011ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை 2,424 புதிய ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு தகவல்.
10:11 February 18
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில்
“கன்னியாகுமரி கடற்கரை ஓரத்தில் சதுப்பு நில காடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும், அலையாத்தி காடுகள் வளர்ப்பால் பெரிய அலைகள் தடுக்க முடியும். சுனாமி ஆகியவற்றை தடுக்க முடியும். எனவே மாங்குரோவ் காடுகளை வளர்க்க வேண்டும்” என கிள்ளியூர் தொகுதி உறுப்பினர் ராஜேஷ்குமார் கோரிக்கை விடுத்தார்.
காற்று வேகத்தைத் தடுக்கவும், அலைகளைத் தடுக்கவும் இந்தப் பகுதியில் சவுக்கு மர தொடர் தோப்புகள் வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர் சேமிக்கவும், வருவாய் அதிகரித்து எரிபொருள், ஆகியவை கிடைக்கிறது. எனவே, தொழில்நுட்ப ரீதியாக இதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
10:03 February 18
விவாதத்தில் பேச இருப்போர்
பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், மனோ தங்கராஜ் ஆகியோர் பேச உள்ளனர்.
10:02 February 18
பேரவை தொடங்கியது
திருக்குறள் வாசித்து பேரவையின் இன்றைய நிகழ்வுகளை சபாநாயகர் தனபால் தொடங்கி வைத்தார்.
09:51 February 18
பேரவைக்கு எம்எல்ஏக்கள் வருகை
பட்ஜெட் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பேரவைக்கு வந்துகொண்டிருக்கின்றனர்.
09:40 February 18
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள நிலையில், அதன் மீதான விவாதம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.