ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலக்கொடி சான்றிதழ் திட்டம் - கடற்கரைகள் தேர்வு - Tn assembly

மெரினா கடற்கரை, நீலாங்கரை கடற்கரை உள்ளிட்ட 10 கடற்கரைகளில் நீலக்கொடி சான்றிதழ் திட்டம் செயல்படுத்தப்படும் எனச் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைகள் தேர்வு
கடற்கரைகள் தேர்வு
author img

By

Published : Sep 3, 2021, 2:51 PM IST

சென்னை: திருத்திய நிதிநிலை அறிக்கை 2021-22ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, கடற்கரைகளின் தரம், பாதுகாப்பு, தகவல் மற்றும் பாதுகாப்புச் சேவையை உயர்த்த, மாசுபாட்டைக் குறைக்க அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி தரச் சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி,

  1. சென்னை - மெரினா கடற்கரை
  2. புதுக்கோட்டை - மணல்மேல்குடி கடற்கரை
  3. ராமநாதபுரம் - குஷி கடற்கரை
  4. கடலூர் - வெள்ளி கடற்கரை
  5. புதுக்கோட்டை - கோட்டைப்பட்டினம் கடற்கரை
  6. செங்கல்பட்டு - நீலாங்கரை கடற்கரை
  7. நாகப்பட்டினம் - ராமேஸ்வரம் கடற்கரை
  8. விழுப்புரம் - நாரவாக்கம் மரக்காணம் கடற்கரை
  9. தூத்துக்குடி - காயல்பட்டினம் கடற்கரை
  10. நாகப்பட்டினம் - நெய்தல் நகர் கடற்கரை ஆகிய 10 கடற்கரைகளில் நீலக்கொடி சான்றிதழ் திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வ.உ.சியின் 150ஆவது பிறந்தநாள்: முதலமைச்சர் அறிவித்த 14 அறிவிப்புகள் என்னென்ன?

ABOUT THE AUTHOR

...view details