தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திரையரங்கு திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

TN Announces SOP For theater Opening
TN Announces SOP For theater Opening

By

Published : Nov 3, 2020, 3:22 PM IST

Updated : Nov 3, 2020, 5:09 PM IST

15:17 November 03

இதுதொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

  • முகக்கவசம் கட்டாயம்
  • 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி
  • திரையரங்கு வளாகத்தில் குறைந்தபட்சம் 6 அடி தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்
  • கரோனா கட்டுப்பாடு பகுதிகளில் திரையரங்குகளுக்கு அனுமதியில்லை
  • ஏசி வெப்பநிலை 24 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரைக்குள் இருக்கலாம்
  • ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு முறை திரையரங்கு மற்றும் வளாகம் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட வேண்டும்
  • திரையரங்கிற்கு வரும் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியைப் பயன்படுத்த வேண்டும்
  • கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்த விளம்பரங்களை திரையரங்குகளில் வெளியிட வேண்டும்
  • திரையரங்கிற்குள் உணவு, குளிர்பானங்கள் வழங்குவது தடை செய்யப்பட வேண்டும்
  • திரையரங்கு வளாகத்தில் உணவு, குளிர்பான பகுதியில் பணிபுரியும் பணியாளர் எவருக்கேனும் இருமல், சளி அல்லது காய்ச்சல் இருப்பின், அவர்களை திரையரங்கு வளாகத்திற்குள் அனுமதிக்காமல், அரசு மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவரின் அறிவுரைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்த வேண்டும். இதனை ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்களில், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உள்பட அனைத்து திரையரங்குகளின் மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் திரையரங்கு உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Nov 3, 2020, 5:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details