நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், “மக்கள் வருங்காலங்களில் செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ விநாயகர் அருள் புரியட்டும்” என வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த ஆளுநர்கள் - vinayagar chaturthi massege wishes
சென்னை : நாளை (ஆக. 22) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதே போல், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் “விநாயகர் சதுர்த்தி பொது மக்களுக்கு பாதுகாப்பைத் தருவதாகவும், அதே சமயம் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகவும், வருங்கால முன்னேற்றத்திற்கு வித்திடுவதாகவும் அமையட்டும். விநாயகர் அருளால் கரோனா எனும் சவாலான சூழ்நிலையை எதிர்க்கும் மன உறுதி கொண்டு, இந்த விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம். பாதுகாப்பான உடல்நிலையும், சுய சார்பான நிலையையும் அடைந்து, நாட்டிலும், வீட்டிலும் மகிழ்ச்சி பொங்க இந்த விநாயகர் சதுர்த்தி வழிவகுக்கட்டும். அனைவருக்கும் எனது இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்” என தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க...வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் விநாயகப் பெருமான்! - முதலமைச்சர் வாழ்த்து