தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தங்கராஜ் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், கரோனா தொற்றால் இறந்த கவுரவ விரிவுரையாளர்களின் குடும்பத்திற்கு அரசு இழப்பீட்டுத் தாெகை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இழப்பீட்டுத் தொகை வழங்குமா அரசு?
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு முழுவதும் உள்ள 149 அரசு கலைக் கல்லூரிகளில், 108 கல்லூரிகள் அரசு கல்லூரிகள், 41 அரசு கல்லூரிகள் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசு கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
108 அரசு கல்லூரியில் யுஜிசி தகுதியுடன் பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கும், யுஜிசி தகுதி இல்லாமல் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றிவரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கும் சம்பளமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசு கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்ட 41 கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தை, தமிழ்நாடு அரசானது பல்கலைக்கழகமே தர அறிவுறுத்தியுள்ளது. இந்தக் கல்வி ஆண்டு ஜுன் முதல் தமிழ்நாடு அரசு ஊதியத்தை தரவேண்டும் என இங்கு பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
குறைந்த ஊதியம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் மட்டுமே தனது கட்டுப்பாட்டில் இயங்கும் உறுப்புக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கி வருகிறது.