சென்னை:தமிழ்நாட்டில் பொதுத் தேர்வு எழுதிய 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 மாணவர்களுக்கான 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை 10:00 மணிக்கும், பொதுத் தேர்வு எழுதிய 7 லட்சத்து 76 ஆயிரத்து 844 மாணவர்களுக்கான 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் இன்று மதியம் 2:00 மணிக்கு பள்ளிக்கல்விக்கான தேர்வுத்துறை வெளியிட்டது.
இந்த முடிவுகளின்படி, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்களில் 91.39% என 8 லட்சத்து 35 ஆயிரத்து 614 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், 4 லட்சத்து 30 ஆயிரத்து 710 பேர் மாணவியர்கள் தேர்ச்சிப் பெற்று, 94.66% மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4 லட்சத்து 4 ஆயிரத்து 904 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்று, 88.16% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம், இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை முந்திய மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் 6.50 சதவீதம் என அதிகமாக உள்ளது.
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 7 லட்சத்து 6 ஆயிரத்து 413 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்று உள்ளனர். இதன்மூலம், தமிழ்நாட்டில் தேர்ச்சி சதவீதம் 90.93 சதவீதமாக உள்ளது. இந்த தேர்வு எழுதிய 4 லட்சத்து 15 ஆயிரத்து 389 மாணவியர்களில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 968 பேர் தேர்ச்சிப் பெற்று 94.36% என தேர்ச்சி விகிதம் உள்ளது. இந்த நிலையில், 86.99 சதவீதம் என 3 லட்சத்து 14 ஆயிரத்து 444 மாணவர்கள் தேர்ச்சிப்பெற்ற நிலையில், வழக்கம்போல, மாணவர்களை விட 7.37% என தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே 10, 11ஆம் வகுப்பில் தேர்ச்சிப்பெறாத மாணவர்களுக்கள் துணைத்தேர்விற்கு 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா இன்று (மே 19) வெளியிட்ட செய்திக்குறிப்பில், '10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.