தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆரணியில் சிலிண்டர் வெடித்து விபத்து: நிவாரணம் வழங்க உத்தரவு - arani Cylinder Blast news

சென்னை: ஆரணியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி
முதலமைச்சர் பழனிசாமி

By

Published : Nov 15, 2020, 2:13 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, புதுகாமூர் பகுதியில் முத்தம்மாள் என்பவரது வீட்டில் இன்று(நவ.15) காலை சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட விபத்தில் காமாட்சி, ஹேமநாதன் என்ற சிறுவன், சந்திரா அம்மாள் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்தத் துயர சம்பவத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்த காமாட்சி, சிறுவன் ஹேமநாதன், சந்திரா அம்மாள் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும்; சாதாரண காயமடைந்தவர்களுக்குத் தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:லாரியில் சமையல் செய்தபோது, சிலிண்டர் வெடித்து விபத்து!

ABOUT THE AUTHOR

...view details