தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவல்லிக்கேணி அதிமுக இணை செயலாளருக்கு கொலை மிரட்டல் - இரண்டு பேர் கைது - Chennai Rowdy Family Fight

சென்னை: திருவல்லிக்கேணி அதிமுக இணை செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அதிமுக இணை செயலாளருக்கு கொலை மிரட்டல்
அதிமுக இணை செயலாளருக்கு கொலை மிரட்டல்

By

Published : Mar 4, 2020, 11:50 PM IST

சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி தோட்டம் சேகர். இவர் சென்ற 2001ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டு உயிரிழந்தார். பிப்ரவரி 26ஆம் தேதி தோட்டம் சேகரின் தாயார் சொக்கம்மாளும் (82) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

அவரின் இறுதி சடங்கின்போது தோட்டம் சேகர் தம்பிகளான அழகுராஜா, பாலாஜி ஆகியோர் தங்கையான சாந்தலட்சுமியை தாயின் உடலை பார்க்கவிடாமல் தடுத்து நிறுத்தி சண்டையிட்டுள்ளனர். மேலும் சாந்தலட்சுமியின் வீட்டிற்கு சென்ற அவர்கள் வீட்டிலிருந்த பொருள்களை உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சாந்தலட்சுமி ஜஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல் துறையினர் அழகுராஜா, பாலாஜியை கைது செய்தனர். சாந்தலட்சுமி திருவல்லிக்கேணி அதிமுக இணை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்கூட்டம் மேடை: குத்தாட்டத்தால் மாணவர்களின் படிப்பு பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details