தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடுமிப்பிடி பிரச்சினையில் லியோ..! 7 மணி காட்சிக்கு வாய்ப்பேயில்லை - திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி! - தமிழக அரசு

Leo Theatre Release Issue: லியோ திரைப்படத்திற்கு காலை 7 மணி காட்சிக்கு அரசு அனுமதி அளித்தாலும், முதல் நாள் 7 மணி காட்சி திரையிடுவது கடினம் என்று தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

குடுமிப்புடி பிரச்சினையில் லியோ
திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 7:04 PM IST

திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி

சென்னை:இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரித்துள்ளார். இதில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் நாளை மறுநாள்(அக்.19) வெளியாக உள்ளது.

லியோ படம் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் சுழன்று வரும் நிலையில், தற்போது படம் வெளியாவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கு தமிழக அரசு தடைவிதித்தது. மேலும் அக்.19-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் முதல் காட்சி காலை 9 மணிக்குத்தான் தொடங்க வேண்டும் என்றும் அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து லியோ படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரி தயாரிப்பு தரப்பில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் 7 மணி காட்சிகள் வேண்டும் என்றால் தமிழக அரசிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டனர்.

அதுமட்டுமின்றி சென்னையில் முக்கிய‌ திரையரங்குகளில் இன்னும் டிக்கெட் புக்கிங் தொடங்கவில்லை. காரணம் திரையரங்குகள் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே பங்குத்தொகையில் இழுபறி நீடித்து வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு தொலைபேசி மூலம் அளித்த சிறப்பு பேட்டியின் போது, "இருதரப்புக்கும் எத்தனை சதவீதம் வழங்க வேண்டும் என்ற பிரச்சினை நீடித்து வருகிறது. இன்று மாலைக்குள் தீர்வு எட்டப்பட்டு ரோகிணி, ஏஜிஎஸ் போன்ற முக்கிய திரையரங்குகளில் டிக்கெட் புக்கிங் தொடங்கி விடும்.

பிவிஆர், ஐநாக்ஸ் போன்றவற்றில் டிக்கெட் புக்கிங் தொடங்கிவிட்டது. விநியோகஸ்தர் தரப்பில் ௭௦ சதவீதம் வரை கேட்கின்றனர். ஆனால் திரையரங்குகள் தரப்பில் ௬௦ சதவீதம் தான் தரப்படும் என்று தெரிவித்துள்ளனர். அரசு அளித்த உத்தரவின் பேரில் 9 மணி காட்சிக்கு புக்கிங் முடிந்துவிட்டது. அதனால் 7 மணி காட்சிக்கு அரசு அனுமதி கொடுத்தாலும், முதல் நாள் 7 மணி காட்சி போடுவது கடினம். அரசு அனுமதி கொடுத்தாலும் 20-ஆம் தேதி தான் 7 மணி காட்சி திரையிட முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:“திரையுலகம் செழிப்பாக இருக்க திமுக அரசுதான் காரணம்” - அமைச்சர் ரகுபதி

ABOUT THE AUTHOR

...view details