12ஆம் வகுப்பு பொது தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் - பொது தேர்வு
சென்னை: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் முதலிடம்
பன்னிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த தேர்வில் மாவட்ட அளவில் திருப்பூர் மாவட்டம் 95.37விழுக்காடு பெற்று முதலிடம் பிடித்துள்ளது. இதை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் 95.23 விழுக்காடும், பெரம்பலூர் மாவட்டம் 95.15 விழுக்காடும், பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. அதேபோல் 2697 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 2,404 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 45 சிறைவாசிகளில் 34 பேர் தேர்ச்சி பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
Last Updated : Apr 19, 2019, 11:24 AM IST