தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பதி ஆகஸ்ட் மாத தரிசனம் - ஆன்லைன் முன்பதிவு தொடக்கம் - ஆன்லைன் டிக்கெட்

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆகஸ்ட் மாதம் தரிசனத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

திருப்பதி ஆகஸ்ட் மாத தரிசனம்
திருப்பதி ஆகஸ்ட் மாத தரிசனம்

By

Published : Jul 20, 2021, 9:49 AM IST

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திருப்பதி ஏழுமலையான் கோயிலிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கான அனுமதியை தேவஸ்தானம் வெகுவாக குறைத்துள்ளது. மேலும், 300 ரூபாய் சிறப்புக் கட்டண தரிசனத்தில் தினமும் 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பக்தர்கள் வரும் ஆகஸ்ட் மாதம் தரிசனம் செய்வதற்காக இன்று (ஜூலை 20) முதல் இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இணையதளத்தில் டிக்கெட் வெளியீடு

இதனையடுத்து, தேவஸ்தான இணையதளத்தில் இன்று காலை 9 மணி முதல் பக்தர்கள் தங்களுக்கான டிக்கெட்டை பெற்று வருகின்றனர். மேலும், கரோனா பரவல் காரணமாக கடந்த மே 5ஆம் தேதி முதல் தர்ம தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், சாமானிய பக்தர்களுக்கான அனுமதியை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்களை நேரில் வரும் பக்தர்களுக்கும் மட்டும் வழங்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பழனியில் தரிசனம் செய்த பாஜக தலைவர் அண்ணாமலை

ABOUT THE AUTHOR

...view details