சென்னை:தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில், வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. குறிப்பாக, தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரிப் பகுதிகளில் லேசான மழையும், காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலையும் நிலவியது. மேலும், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று இரவு வரை பலமணி நேரம் இடைவிடாமல் கனமழை பெய்தது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவை குறித்து செய்தி தொகுப்பு.
கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு:கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 95 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து, திருச்செந்தூர் - 69 செ.மீ, ஸ்ரீவைகுண்டம் - 62 செ.மீ, மூலைக்கரைப்பட்டி - 61 செ.மீ, மாஞ்சோலையில் - 55 செ.மீ, கோவில்பட்டியில் - 53 செ.மீ, குண்டாறு அணை - 51.செ.மீ, நாலுமுக்கு - 47 செ.மீ, பாளையம்கோட்டை - 44 செ.மீ, அம்பாசமுத்திரம் - 43 செ.மீ, மணியாச்சி - 42 செ.மீ மற்றும் சேரன்மகாதேவி, கன்னடயன் அணைக்கட்டு 41 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
20 செ.மீ முதல் 39 செ.மீ வரை மழை பதிவான இடங்கள் :ஒட்டப்பிடாரம் , கடம்பூர் 37 செ.மீ மழையும், காக்காச்சி, நம்பியாறு அணையில் தலா 36 செ.மீ மழையும், பாபநாசம் 35 செ.மீ மழையும், நாங்குனேரி குலசேகரப்பட்டினம், மணிமுத்தாறு ஆகிய பகுதிகளில் தலா 33 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மேலும், களக்காடு 32 செ.மீ , திருநெல்வேலி டவுன் 31செ.மீ , கொடுமுடியாறு அணை, செங்கோட்டை , மைலாடி , வேதநாதம் பகுதிகளில் தலா 30 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதனைத்தொடர்ந்து, ராதாபுரம், சேர்வலாறு அணையில் தலா 28 செ.மீ மழையும், கயத்தார் 27 செ.மீ , விளாத்திகுளம் 26 செ.மீ , கடனா அணை, வைப்பாறு தலா 22 செ.மீ , ஆயிக்குடி, ராம நதி அணைப் பகுதியில் தலா 21 செ.மீ மற்றும் சாத்தூரில் 20 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
10 செ.மீ முதல் 19 செ.மீ வரை மழைப் பதிவான இடங்கள்:நாகர்கோவில், கொட்டாரம், வெம்பக்கோட்டைப் பகுதிகளில் தலா 18 செ.மீ , கன்னியாகுமரி, எட்டயபுரம், சிவகாசி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, கோவிலங்குளம், தென்காசியில் தலா 17 செ.மீ , சூரங்குடி, சிவகிரி, கன்னிமார் பகுதியில் 16 செ.மீ , ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழி, விருதுநகர், வத்திராயிருப்புகளில் 15செ.மீ , பிளவக்கல், பெரியாறு அணை, பூதப்பாண்டி, ராஜபாளையம் பகுதிகளில் தலா 14 செ.மீ , திருப்பதிசாரம், AWS கடல்குடி, சுருளக்கோடு, கருப்பாநதி அணை, கமுதி , விருதுநகர் சோத்துப்பாறையில் தலா 13 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
மேலும், அருப்புக்கோட்டை, மாம்பழத்துறையாறு, அணைகெடங்கு, பேச்சிப்பாறை, திற்பரப்பு, பெருஞ்சாணி அணை, குருந்தன்கோடு, சிற்றாறு ஆகிய இடங்களில் தலா 12 செ.மீ மழையும், புத்தன் அணை, ஆரல்வாய்மொழி, எழுமலை, கோழிப்போர்விளை, ராமநாதபுரம் AWS, தேக்கடி, கமுதி, கடலாடி, வீரபாண்டி பகுதிகளில் தலா 11 செ.மீ மழையும், ராமநாதபுரம், கொடைக்கானல், இரணியல், பேரையூரில் 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 39 இடங்களில் அதி கனமழையும், 33 இடங்களில் மிகக் கனமழையும், 12 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இயல்பை விட அதிகமாக மழைப் பதிவான தென் மாவட்டங்கள்: வடகிழக்கு பருவமழை பொறுத்தவரைத் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்.1 முதல் இன்று(டிச.18) வரையில் பதிவான மழையின் அளவு 44 செ.மீ. இந்த காலகட்டத்தின் சராசரி அளவு 42 செ.மீ. ஆகும். இது ஐந்து சதவீதம் இயல்பைவிட அதிகம். ஆனால், மாவட்டம் வாரியாக, அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை கன்னியாகுமரியில் பதிவான மழை அளவு ஆயிரத்து 50 மி.மீ ஆகும். இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு என்பது 516.மி.மீ. இது இயல்பை விட 103% சதவீதம் ஆகும்.
மேலும், திருநெல்வேலியில் பதிவான மழை அளவு 363.மி.மீ, இயல்பான அளவு ஆயிரத்து123.8 மி.மீ ஆகும். இது இயல்பை விட 135% சதவீதம் அதிகம். தூத்துக்குடியில் பதிவான மழை அளவு 701.மி.மீ, இயல்பான மழை அளவு 417.1 மி.மீ ஆகும். இது இயல்பை விட 68 சதவீதம் அதிகம் ஆகும். தென்காசியில் பதிவான மழை அளவு 799.மி.மீ, இயல்பான 444 மி.மீ. இது இயல்பை விட 80 சதவீதம் அதிகம் ஆகும்.
இதையும் படிங்க:போடி மெட்டு மலைச்சாலையில் மண்சரிவு: தமிழ்நாடு-கேரளா இடையே போக்குவரத்து பாதிப்பு!