டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர், ' சீமானுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் என்ன தொடர்பு உள்ளது?. வரலாற்றில் கறை படிந்த நாளை பெருமைக்குரிய நாளாக சீமான் வர்ணிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது' என்றும் கூறினார்.
'சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' - சீறிய திருநாவுக்கரசர்! - seeman controversy speech rajiv ganthi
சென்னை: ராஜீவ் காந்தியின் மரணத்தை நியாயப்படுத்தி பேசிய சீமான் மீது மத்திய உள்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் திருநாவுக்கரசர் பேட்டியளித்துள்ளார்.
Tirunavukkarasar latest Interview, திருநாவுக்கரசர் சீமான் குறித்து பேட்டி
தொடர்ந்து பேசிய அவர், 'பல கோடி இந்திய மக்களை காயப்படுத்தும் வகையில் சீமான் பேசி வருகிறார். 4 பேர் கைதட்ட வேண்டும் என்பதற்காக அருவருக்கத்தக்க வகையில் பேசியதற்காக சீமான் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் நேரத்தில் சிலரின் அபிமானத்தைப் பெறுவதற்காக நாட்டுக்கு விரோதமாக பேசிய சீமான் மீது, மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜக பிரமுகருக்கு ஆதரவு தெரிவித்த சீமான்!