தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்க - வலியுறுத்திய திருமாவளவன் எம்.பி. - முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் செய்க..! - திருமாவளவன்
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் செய்க..! - திருமாவளவன்

By

Published : Oct 3, 2022, 11:07 PM IST

சென்னைவள்ளுவர் கோட்டத்தில் அரசாணை 149 ரத்து செய்து, தேர்தல் வாக்குறுதி 177ஐ அமல்படுத்த வேண்டும் என ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், "ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணி நியமனத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். 50 வயது ஆகியும், பணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

வறுமையிலும் காத்திருந்து போராடிக்கொண்டிருக்கின்றனர். ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குவது தொடர்பாக ஏற்கெனவே அமைச்சரிடம் கூறியிருக்கிறோம். அடுத்த கட்டமாக இதை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு செல்ல இருக்கிறோம்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்க - வலியுறுத்திய திருமாவளவன் எம்.பி.

அரசாணை 149ஐ ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட நிலையில் உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம். நீண்ட நாட்களாகப் பணி நியமனத்திற்காக தேர்ச்சி பெற்று காத்துக்கொண்டிருக்கின்றார்கள். முதலமைச்சரின் தனிக்கவனத்திற்குக்கொண்டு சென்று இதற்கு தீர்வு காணலாம். அதுவரை சற்று பொறுமையாக இருக்க வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:M.E, M.Tech படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!

ABOUT THE AUTHOR

...view details