தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியாக செல்லும் பெண்களுக்கு குறி.. திருமங்கலம் பகுதியில் நடப்பது என்ன? - crime news today

சென்னை திருமங்கலத்தில் தொடரும் செயின் பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தனியாக செல்லும் பெண்களுக்கு குறி.. திருமங்கலம் பகுதியில் நடப்பது என்ன?
தனியாக செல்லும் பெண்களுக்கு குறி.. திருமங்கலம் பகுதியில் நடப்பது என்ன?

By

Published : Nov 28, 2022, 10:01 AM IST

சென்னை: திருமங்கலம் வசந்தம் காலனி மற்றும் சௌந்தர்யா காலனி ஆகிய பகுதிகளில், தனியாக நடைபயிற்சி மேற்கொள்ளும் மற்றும் கடைகளுக்கு செல்லும் பெண்களை குறிவைத்து தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக நேற்றைய முன்தினம் (நவ 26) செளந்தர்யா காலனி பூங்கா அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்த லதா (40) என்ற பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் செயின் பறிக்க முயன்றுள்ளனர். இதில் அந்த பெண் கீழே விழுந்து காயமடைந்தார்.

அதேபோல் நவம்பர் 25 அன்று நடைபயிற்சி மேற்கொண்டிருந்த விமலா என்ற பெண்ணிடம் இருந்து, 4 சவரன் தங்கச்செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

இவ்வாறு நடைபெறும் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:கோயிலில் செயின் பறிப்பு - அடித்து உதைத்த பொதுமக்கள்

ABOUT THE AUTHOR

...view details