சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பருவமழை வழக்கத்தை விட அதிகம் பெய்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.
மின் கட்டணம் செலுத்த அவகாசம் - ஸ்டாலின்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மின் கட்டணம்
எனவே இந்த 4 மாவட்டங்களிலும், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மின் கட்டணம் செலுத்த கடைசி நாள் நவம்பர் 30 ஆம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கனமழை எச்சரிக்கை...பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டாம்...