இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2020 ஆண்டிற்கான சேர்க்கைக்குwww.skilltraining.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் செப்டம்பர் 15ஆம் தேதி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது, ஆன்லைன் மூலம் செப்டம்பர் 17ஆம் தேதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்களுக்கான மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல் செப்டம்பர் 18ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் 16ஆம் தேதி முதல் விண்ணப்பதாரர்களின் தரவரிசைக்கு ஏற்ப அவர்களுக்கு கலந்தாய்விற்கு ஒதுக்கப்பட்ட தேதி எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு ஒதுக்கீட்டு முன்னுரிமை விண்ணப்பதாரர்களுக்கும், 23, 24, 25 ஆகிய நாள்களில் பொது கலந்தாய்வும் நடைபெறும்.