சென்னை:சென்னை, அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 72 வயது மூதாட்டி. காலமான ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரின் மனைவியான. இவர் வீட்டில் தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று, மூதாட்டியின் மகன் மற்றும் அவரது மனைவி பணிக்கு சென்ற போது மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.
அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று கதவைத் தட்டி வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்டுள்ளனர். அப்போது நாங்களே வாடகைக்கு தான் குடியிருக்கிறோம் என்று மூதாட்டி கூற, உடனடியாக அவர்கள் கதவை எட்டி உதைத்து வீட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் மூதாட்டியின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு மூதாட்டியின் கழுத்து மற்றும் கையில் அணிந்திருந்த நகைகளை பறித்துள்ளனர். பின்னர் வீட்டிலிருந்த பீரோ மற்றும் லாக்கரை உடைத்து 40சவரன் நகை மற்றும் 83ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் மூதாட்டியை நிர்வாணப்படுத்தி அவர்களது செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தைப் பற்றி போலீஸிடம் கூறினால் நிர்வாண வீடியோவை இணையதளத்தில் பரப்பிவிடுவேன் எனவும், வீட்டிலிருக்கும் அனைவரையும் கொலை செய்துவிடுவேன் எனவும் மூதாட்டியை மிரட்டியுள்ளனர்.