சென்னை அடுத்த பட்டாபிராமில் புதிய டைட்டில் பார்க் கட்டிடப் பணிகளை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு செய்தார். அப்போது, இந்த கட்டிட பணிகள் மிக காலதாமதமாக நடைபெறுவதாகவும், பணிகளை விரைவாக முடித்து கொடுக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "எந்த நிலையிலும் கரோனா நோயாளியை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அரசு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. நாம் முகக் கவசம் அணிந்து சமூக விதிகளை கடைபிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அதிக அளவில் இருந்த கரோனா தற்போது குறைந்துள்ளது.
ரூ. 1000 கோடி பட்டாபிராமில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு முதலீடு ஆவடி பெருந்தலைவரால் உலக வரைபடத்தில் இருப்பது தெரிய வந்தது. காட்டுப்பள்ளி என்ற இடத்தில் துறைமுகம் வருகிறது. இதேபோன்று முதலமைச்சர் பல்வேறு இடங்களில் பாலங்களை கொண்டு வந்துள்ளார்.
பிரதமர் மோடி 3000 கோடி முதலீட்டில் காஞ்சிபுரத்தில் ராணுவ தளவாட கண்காட்சி (DEFENCE EXPOS) அமைக்க அறிவித்துள்ள நிலையில், ரூ. 1000 கோடி முதலீட்டை ஆவடியில் உள்ள பட்டாபிராமில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு வழங்குமாறு பிரதமரிடம் முதலமைச்சர் பேசி முடிவு எடுப்பார்" என்றார்.
இதையும் படிங்க: கிராமங்கள் அதிவேக இணையதளம் மூலம் இணைக்கப்படும் - அமைச்சர் ஆர்.பி.யு.