காதலித்து திருமணம் செய்த கணவன் கைவிட்டுச் சென்றதாக பெண், அவரது சகோதரியுடன் இணைந்து தனியார் இணையதள சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தார். விட்டுச்சென்ற கணவனையே தொடர்ந்து காதலிப்பதாகவும் பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
காதலில் இப்படித்தான் இருக்க வேண்டும் என பெண்ணிற்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். டிக் டாக்கில் சந்தோஷமாக பல வீடியோக்களை வெளியிட்டதால், அவர்களை பலரும் அவதூறாக பேசி தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.