துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழா சென்ற 14ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
அப்போது ரஜினிகாந்த் பேசுகையில், 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் நடத்திய பேரணியில் இந்து கடவுள்களான ராமர், சீதையின் நிர்வாண படங்களுக்கு காலணி மாலை அணிவித்ததாகவும், அதை துக்ளக் இதழ் மட்டுமே தைரியமாக வெளியிட்டதாகவும் கூறினார்.
ஊர்வலத்தின் புகைப்படங்கள் இதையும் படிங்க: யாரும் எதிர்த்துப் பேச அஞ்சிய பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ! - ரஜினி புகழாரம்
ரஜினியின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநிலம் முழுவதும் ரஜினிக்கு எதிராகக் காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. வாய்க்கு வந்த கருத்துகளை ரஜினி பேசிவருவதாகவும், பெரியார் குறித்து அவதூறு பரப்பியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கோரிக்கைவைத்தனர். அதுமட்டுமின்றி மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினிகாந்தின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் வெளிப்படையாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இதையும் படிங்க: பெரியாருக்கு எதிரான ரஜினியின் போர் வெல்லுமா?
இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, சேலம் ஊர்வலம் தொடர்பாகத் துக்ளக் விழாவில் தாம் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும், அந்தச் சம்பவம் நடந்தது உண்மைதான் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
அதற்கு ஆதரமாக அவுட்லுக் இதழில் வெளியான செய்தியின் நகலையும் செய்தியாளர்கள் முன் காண்பித்தார் ரஜினி. இதற்கும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக, ரஜினி குறிப்பிட்ட துக்ளக் பிரதியின் நகலை துக்ளக் ஆவணக் காப்பகத்திலிருந்து பெற்று ரஜினி காண்பித்திருக்கலாமே போன்ற விமர்சனங்கள் பெரிய அளவில் முன்வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: ‘சாரி... பெரியார் குறித்த கருத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது’ - ரஜினி திட்டவட்டம்
இந்நிலையில், அந்தத் தேதியில் வெளியான செய்தியாக, துக்ளக்கின் தற்போதைய இதழில் புகைப்படங்களுடன் கூடிய செய்திக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.
ஊர்வலத்தின் புகைப்படங்கள் அதில், ஊர்வலகத்தைத் தலைமையேற்று நடத்திய பெரியாரையும், கருணாநிதி தலைமையிலான அப்போதைய திமுக அரசையும் பாராட்ட வேண்டும் என்றும், கருணாநிதி தன் கடைமையை முறையாகச் செய்துள்ளார் எனவும் சோ தனக்கே உரிய பாணியில் விமர்சித்திருந்தார்.
இதையும் படிங்க: கருணாநிதி முன் ரஜினி பேசிய பெரியாரின் ‘பகுத்தறிவு’ - அன்றும் இன்றும் ஒரு ரீவைண்ட்!