தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை பெண் மருத்துவரிடம் கைவரிசை.. ஜம்தாரா கும்பல் சிக்கியது எப்படி? - chennai crime news

வெளிநாட்டுக்கு கொரியர் மூலம் பொருட்களை அனுப்ப முயன்ற விவகாரத்தில் பெண் மருத்துவரை ஏமாற்றி 8 லட்ச ரூபாய் வரை மோசடி செய்து ஜம்தாரா கும்பலை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

மூன்று பேர் கைது
மூன்று பேர் கைது

By

Published : Nov 9, 2022, 3:55 PM IST

சென்னை:அண்ணா நகரில் வசித்து வருபவர் மருத்துவர் ரெஜீனா. இவர் கனடா நாட்டில் உள்ள தனது மகளுக்கு சில பொருட்களை அனுப்புவதற்காக இணையதளத்தில் சர்வதேச கொரியர் நிறுவனங்கள் குறித்து தேடியிருக்கிறார். அப்போது, பிரபல நிறுவனமான ப்ளூ டார்ட் கொரியர் சேவை எனக்கூறி ஒரு டோல் ஃப்ரீ எண் இருந்துள்ளது.

அதற்கு தொலைபேசியில் அழைத்த போது, அந்த எண்ணில் இருந்து மீண்டும் மருத்துவருக்கு அழைப்பு வந்துள்ளது. அப்போது அவருடைய விவரங்கள் அனுப்பக்கூடிய பொருட்கள் அவருடைய வங்கி கணக்கு, யுபிஐ விவரங்கள் ஆகியவற்றை அனைத்தையும் கேட்டுள்ளனர்.

இதனை உண்மை என நம்பிய மருத்துவர் ரெஜினா, அவருடைய வங்கி கணக்கு விவரங்கள் யுபிஐ ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றையும் கொடுத்து இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் ஒருபடி மேலாக போய் ஓடிபி எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லையும் அனுப்பியுள்ளார்.

இந்த விவரங்களை பெற்ற மோசடி கும்பல் ரெஜினாவின் வங்கி கணக்கை அவரது பாஸ்வேர்டு பயன்படுத்தி ரெஜினாவுக்கு தெரியாமல் பயன்படுத்தி வந்துள்ளனர். நாளொன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் என எட்டு நாட்களுக்குள் சுமார் 8 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் பணத்தை அவரது வங்கி கணக்கில் இருந்து எடுத்திருக்கிறார்கள். அவரது யுபிஐ ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தியதால், யுபிஐயிலிருந்து அவருக்கு எந்தவிதமான குறுஞ்செய்திகளும் வரவில்லை.

அதேநேரத்தில் வங்கியில் இருந்து வந்த குறுஞ்செய்திகளை அவர் கவனிக்காமல் விட்டிருக்கிறார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அந்த டோல் ஃப்ரீ எண், முகவரி ஆகியவற்றை வைத்து ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவுக்கு சென்று, ஷம்ஷாத் அன்சாரி, இக்பால் அன்சாரி, ஷக்பாஸ் அன்சாரி ஆகிய மூன்று நபர்களையும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க:மனைவி குடும்பத்தை பழிவாங்க திட்டம்...கடத்தப்பட்டதாக நாடகம் ஆடியவர் கைது

ABOUT THE AUTHOR

...view details