சென்னை:தேர்வுநிலை பேரூராட்சியாக இருந்த திருநின்றவூர் 6 மாதங்களுக்கு முன் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் 27 இடங்களிலும் அதிமுக 26 இடங்களிலும் போட்டியிட்டது.
சுயேட்சையாக 35 பேர் போட்டியிட்டனர். இதில் திமுகவை சேர்ந்த 15 பேர் வெற்றி பெற்றதை தொடர்ந்து நகராட்சி அக்கட்சி வசம் ஆனது. திமுக வேட்பாளராக 14 வார்டில் முன்னாள் பேரூராட்சி தலைவரும் நகர செயலாளருமான தி.வை.ரவி 924 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.