சென்னை:பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சங்கர்நகர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்து. தகவலின் அடிப்படையில் அவர்கள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, பம்மல் பகுதியில் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் சாம்சன்(31) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், தான் பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ஜோனத்தன் எலிசபத்(22), பம்மல் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்(23) ஆகியோரிடமிருந்து கஞ்சாவை வாங்கி புகைப்பது மட்டுமல்லாது, கஞ்சாவை விற்பதாக அவர் ஒப்புக்கொண்டார்.