தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியையிடம் வழிப்பறி செய்த திருநங்கைகள் கைது

தனியார் பள்ளி தலைமை ஆசிரியையிடமிருந்து பணம் வழிப்பறி மூன்று திருநங்கைகளை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

கைது
கைது

By

Published : Nov 20, 2021, 1:19 PM IST

சென்னை: திருவல்லிக்கேணியில் தனியார் பள்ளியொன்றில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்துவருபவர் காருண்யா. இவர் நேற்று (நவம்பர் 19) மாலை பொருள்கள் வாங்க புரசைவாக்கம் சென்றுள்ளார்.

வேப்பேரி ரித்தர்டன் சாலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது திருநங்கைகள் சிலர் இவரை வழிமறித்து ஏழாயிரம் ரூபாய் பணத்துடன் இருந்த பர்ஸ்சை பறித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.

உடனே இது குறித்து காருண்யா வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தபோது இதில் சுமித்ரா (23), சிவன்யா (19), சிவகாமி (38) ஆகிய மூன்று திருநங்கைகளை ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து வேப்பேரி காவல் துறையினர் மூவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:முதியோருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்துகொடுத்து வீட்டில் திருடிய பணிப்பெண் கைது

ABOUT THE AUTHOR

...view details