சென்னை:தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குருப் 1 பணியில் காலியாக உள்ள 92 இடங்களுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். ஒரு பணியிடத்திற்கு 3,443 பேர் போட்டியிட்டு விண்ணப்பம் செய்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குருப் 1 பணியில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கு ஆகஸ்ட் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.