தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமித்ஷா விடம் முதலமைச்சர் வைத்த மூன்று கோரிக்கைகள்! - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: கலைவாணர் அரங்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று கோரிக்கை மனுக்களை அளித்துள்ளார்.

அமித்ஷாவிடம் முதமைச்சர் வைத்த மூன்று கோரிக்கை!
அமித்ஷாவிடம் முதமைச்சர் வைத்த மூன்று கோரிக்கை!

By

Published : Nov 21, 2020, 11:13 PM IST

சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது, ரூபாய் 380 கோடி மதிப்பீட்டிலான புதிய நீர்த்தேக்கத் திட்டத்தினை மக்கள் பயன்பாட்டுற்கு உள் துறை அமைச்சர் அமித் ஷா அர்ப்பணித்தார். மேலும், ரூபாய் 67 ஆயிரத்து 378 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உள் துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மூன்று மனுக்களை வழங்கினார்.

முதல் மனுவில்:சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்திற்கான செலவை மத்திய, மாநில அரசுகள் சரிபாதியாக பகிர்ந்துகொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மனுவில்:காவிரி-குண்டாறு இணைப்புத்திட்டம், கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் ஆகியவற்றுக்கு ஒப்புதல் வழங்கி நிதி அளிக்க வேண்டும். மேலும் ரூ.10,700 கோடி ரூபாய் மதிப்பிலான நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது மனுவில்:ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டத்தை விருதுநகர் அல்லது தருமபுரி மாவட்டங்களில் அமைக்க வேண்டும் என்றும், மருத்துவ உபகரண தயாரிப்பு பூங்கா, மருந்து தயாரிப்பு பூங்கா ஆகியவற்றை சென்னைக்கு அருகே அமைப்பதற்கு தொழில் நுட்ப மற்றும் நிதி உதவி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details