மதுரையிலிருந்து சென்னைக்கு 81 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த தனியாா் (ஸ்பைஜெட்) பயணிகள் விமானம் சென்னையில் மாலை 5.20 மணிக்கு தரையிறங்க வேண்டும். அப்போது சென்னை விமானநிலைய பகுதியில் பலத்த சூறைக்காற்று, இடி, மின்னல் இருந்ததால் விமானம் தரையிறங்க விமானநிலைய கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் அனுமதி கொடுக்கவில்லை. இதனால், விமானிகள் விமானத்தை வானிலேயே தொடா்ந்து வட்டமடிக்க செய்தனா்.
அதைபோல் தோகாவிலிருந்து 128 பயணிகளுடன் மாலை 5.15 மணிக்கு தரையிறங்க வந்த மீட்பு சிறப்பு விமானம், குவைத்திலிருந்து மாலை 5.45 மணிக்கு சென்னையில் தரையிறங்க வேண்டிய சரக்கு விமானம் ஆகியவைகளும் தரையிறங்க முடியாமல் வானில் தொடா்ந்து வட்டமடித்தன.