சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நைனியப்பன் தோட்டம் 1ஆவது தெருவில் வசித்துவருகிறார் அப்துல் ரசாக். இவர் தனக்கு சொந்தமான டியோ இருசக்கர வாகனத்தை தனது வீட்டின் அருகில் நிறுத்தி வைத்தார். இந்த வாகனம் திடீரென மாயமானது. இதையடுத்து அவர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதேபோல், அதே பகுதியில் தஸ்தகீர் பாஷா என்பவருக்குச் சொந்தமான ஆக்டிவா பைக் காணாமல் போயிருந்தது. இந்த இரண்டு புகார்களின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கென தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் கண்ணன் ரவுண்டானா அருகே சுற்றித் திரிந்த தமிமுன் அன்சாரி (37), அமீனுள்ளா (40), அன்புச்செழியன்(56) ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை செய்தனர்.