சென்னை: மயிலாப்பூரில் இருந்து திருவான்மியூர் நோக்கி கார் ஒன்று இன்று (டிச.31) அதிகாலையில் சென்று கொண்டிருந்தது. கார் அடையாறு திருவிக பாலத்தில் வேகமாக சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் நடைமேடை பகுதியில் ஏறி, அதன் பின்பாக அடுத்து உள்ள பூக்கடையினுள் புகுந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக காரில் உள்ளவர்களை மீட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்த சாஸ்திரி நகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் தியாகராய நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் காரை ஓட்டி வந்ததும், காரினுள் இரண்டு சிறுவர்கள் இருந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் மூவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர்.