சென்னை மாவட்டம் வில்லிவாக்கத்திலிருந்து புறநகர் பகுதியான ஆவடிக்கு, அம்பத்தூர் வழியாக காரில் கஞ்சா கடத்தி செல்வதாக அம்பத்தூர் காவல் ஆய்வாளர்ராஜகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலனின் பேரில் துணைக் காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் காவல்துறையினர் அம்பத்தூர்- செங்குன்றம் நெடுஞ்சாலை, சண்முகபுரம் அய்யப்பன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக வேகமாக வந்த காரை காவல்துறையினர் வழிமடக்கி சோதனை செய்தனர். சோதனையில், காருக்குள் பிளாஸ்டிக் பையில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காரில் இருந்த 3 வாலிபர்களை காவல்துறையினர், அம்பத்தூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.