சென்னை: திருவல்லிக்கேணி நடேசன் சாலையைச் சேர்ந்த தேவராஜ் (42) பெரியமேடு ஈவி ஆர் சாலையில் சொந்தமாக ஜாய் என்ற பெயரில் உணவகம் வைத்து நடத்திவருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு (டிசம்பர் 16) உணவகத்துக்கு குடிபோதையில் சென்ற நான்கு பேர் உணவு ஆர்டர் செய்து, சிறிது நேரம் உணவுக்காகக் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த நான்கு பேரும் உணவக ஊழியரைத் தகாத சொற்களால் பேசியுள்ளனர்.
இதனைக் கண்ட உணவக உரிமையாளர் தேவராஜ் அவர்களைத் தட்டிக்கேட்டபோது வாக்குவாதம் முற்றி, நான்கு பேரும் தேவராஜை சரமாரியாகக் கற்களால் தாக்கினர். மேலும் இதனைத் தடுக்கவந்த நபர்களையும் நான்கு பேரும் இணைந்து தாக்கிவிட்டுத் தப்பியோடினர்.