சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் குரூப் 1 நிலையில் துணை ஆட்சியர் 18, காவல் துணை கண்காணிப்பாளர் 26, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் 13, வணிகவரி உதவி ஆணையர் 25, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் 7, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 3 என காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான ஜூலை மாதம் 21ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதனைத்தாெடர்ந்து 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வை நாளை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையில் எழுத உள்ளனர்.