தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் திடீர் மழை - மூன்று பேர் உயிரிழப்பு - rain in chennai

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால் நேற்று (டிசம்பர் 30) 13 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

heavy rain
heavy rain

By

Published : Dec 31, 2021, 12:38 PM IST

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (டிசம்பர் 30) மாலை திடீரென பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், அடையாறு பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(5), நேற்றிரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மைலாப்பூர் சாலையில் சென்றபோது, பாலசுப்ரமணியன்ன் பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்கள், பாலசுப்ரமணியன் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து மயிலாப்பூர் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மட்டுமின்றி கனமழையால் 13 வயது சிறுவன் உட்பட 3 பேர் நேற்று உயிரிழந்தனர்.

இதையும் படிங்க:கனமழை - 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி இன்று விடுமுறை

ABOUT THE AUTHOR

...view details