தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஃபீனிக்ஸ் மால் ஊழியர்களுக்கு கரோனா- அதிர்ச்சியில் சென்னை மக்கள்! - ஃபீனிக்ஸ் மால்

சென்னை: வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் இயங்கிவந்த லைஃப்ஸ்டைல் கடையில் பணிபுரிந்த மூன்று ஊழியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

ஃபீனிக்ஸ் மால் ஊழியர்களுக்கு கரோனா
ஃபீனிக்ஸ் மால் ஊழியர்களுக்கு கரோனா

By

Published : Apr 3, 2020, 1:16 PM IST

கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவருடன் தொடர்புடைய அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அந்த வகையில் சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் மாலில் இயங்கிவந்த லைஃப்ஸ்டைல் கடையில் வேலைப் பார்க்கும் மூன்று ஊழியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு வேலை செய்யும் மற்றவர்கள், அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மார்ச் 10ஆம் தேதியிலிருந்து மார்ச் 17ஆம் தேதி வரையில் ஃபீனிக்ஸ் மாலிற்கு (லைஃப்ஸ்டைலிற்கு) சென்று வந்தவர்கள், மாலில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களும், தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு கரோனா அறிகுறிகள் இருந்தால், மருத்துவக் கட்டுப்பாட்டு எண்ணுக்கு அழைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

  • தொடர்பு கொள்ள வேண்டிய எண்:044 46122300

இதையும் படிங்க:கரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள புதிய செயலி...!

ABOUT THE AUTHOR

...view details