சென்னை புதுப்பேட்டையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்துவரும் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியாகியுள்ளது. இவர், தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். ஏற்கனவே புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் தங்கியிருக்கும் காவலருக்கு கரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.
அதே குடியிருப்பில் தங்கியிருக்கும் 46 வயதான காவலர் ஒருவர் ஆயுதப்படை காய்கறி அங்காடியை கவனித்து வந்துள்ளார். இதனால், கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு அவர் அடிக்கடி சென்று வந்ததாகத் தெரிகிறது. கோயம்பேடு காய்கறிச் சந்தை கரோனா தொற்று பாதிப்பைத் தொடர்ந்து, இவர் கடந்த மூன்றாம் தேதி ஓமந்தூரார் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.