சென்னை:கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் மூன்று சிறுமிகள், அங்குள்ள விடுதியில் தங்கி 11 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை (செப் 20) அன்று இரவு 11 மணியளவில் மூன்று சிறுமிகளும் மங்களூரில் இருந்து புறப்பட்டு நேற்று (செப் 23) இரவு 11.30 மணியளவில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமிகள் மூவரும் அங்கிருந்து வேறு இடத்திற்கு செல்வதற்காக ஆட்டோவில் ஏறியுள்ளனர். சிறுமிகளின் மீது சந்தேகம் ஏற்பட்ட ஆட்டோ ஓட்டுநர், சிறுமிகளை கே11 காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.